வெளிநாட்டில் பிரபல நடிகருடன் ஊர் சுற்றும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்! வைரலாகும் புகைப்படம்
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன் துபாய்யின் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு முன் தன் இரு மகள்களை சினிமாவிற்கு அறிமுகம் செய்திருந்தார்.
அம்மா இறந்த பின்பு மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிகையாகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் வந்தார். சமீபத்தில் தமிழ் படங்களில் அவரது தந்தை போனி கபூர் அறிமுகப்படுத்துவார் என்ற செய்தியும் வெளியானது.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஜான்வி க்ளமார் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் பார்ட்டி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் வருண் தவாணுடன் பாவல் என்ற படத்தின் ஷூட்டிங்கினை ஆரம்பித்துள்ளார்.
அதற்காக அவருடன் சேர்ந்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ்-க்கு சென்று அங்குள்ள மாலில் குத்தாட்டம் போட்ட வீடியோவையும் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டார்.
தற்போது ஜெர்மன் மெர்லின் நகருக்கு சென்று அங்கு எடுத்த க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளர்.