அந்த இயக்குநரின் படம் என்றால் அப்படிக்கூட நடிக்க ரெடி.. ஓப்பனாக ஒப்பு கொண்ட ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை அனைவரும் அறிவோம்.
ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் Cannes திரைப்பட விழாவில் ஜான்வி நடித்த Homebound என்ற படம் திரையிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜான்வி கபூர் ஓபன்
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் Neeraj Ghaywan குறித்து ஜான்வி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " Neeraj Ghaywan படத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்களுக்கு ஆசை உண்டு. எனக்கும் அந்த ஆசை இருந்து நிறைவேறிவிட்டது. அவர் படம் என்றால் பின்னணியில் இருக்கும் மரமாக கூட நான் நடிக்க ரெடி" என்று தெரிவித்துள்ளார்.