விஜய்யுடன் சண்டை போட்ட நபரை வெறித்தனமாக ரசிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. அட, பாவி

vijay yuvan shankar raja thalapathy sanjay jason sanjay vijay son vijay fight
By Kathick Mar 01, 2022 09:42 AM GMT
Report

நடிகர் விஜய்யின் சஞ்சய் என்று ஒரு மகனும், திவ்யா என்று ஒரு மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் கடந்த சில ஆண்டுகளாக கேனடாவில் தங்கி திரைத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். தனது மகனுடன் விஜய் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் பெரிதளவில் வெளிவரவிட்டாலும், அவ்வப்போது இணையத்தில் சில புகைப்படங்களை கசிந்து, ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வெறித்தனமான ரசிகராம். அவருடைய பாடல்களுக்கு சஞ்சய் தினமும் கேட்டுக்கொண்டே இருப்பாராம். இதனை யுவன் பொது மேடையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படத்திற்காக யுவன் இசையமைத்திருந்தார். அப்படத்தில் விஜய்க்கும், யுவன் ஷங்கர் ராஜாவிற்கும், ஏற்பட்ட சிறு சண்டையின் காரணமாக இருவரும் 18 ஆண்டுகள் இணைந்து பணிபுரியாமல் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.