தடுமாறும் ஜேசன் சஞ்சய்... தாமதமாகும் முதல் படம்! காரணம் என்ன தெரியுமா?
Vijay
Actors
jason sanjay
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் பற்றிய அடுத்தகட்ட அப்டேட் வெளிவராமல் இருக்க காரணம் என்ன என்று தகவல் வந்துள்ளது.
அதன்படி ஜேசன் சஞ்சய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியாதாம், அவர் தன்னுடைய படத்துக்கான ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் எழுதி வருவதாகவும், அதனை ஒருவர் மொழி பெயர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் பணிகள் தாமதமாகி வருகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.