நாடகமாடிய சிம்பு.. ஜெயம்ரவி உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர் அந்தணன்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விக்ரம் - ஜெயம்ரவி சொன்னது
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தினை ஆரம்பிக்க நட்சத்திரங்களை தேர்வு செய்த போது சிம்பு அப்படத்தில் வண்ணியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் விக்ரம், ஜெயம் ரவி நடிக்க மறுத்ததாகவும் பிரபல பத்திரிக்கையாளர்கள் அந்தணன், பிஸ்மி சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தனர்.
இந்த செய்தி பெரியளவில் பேசப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஜெயம் ரவியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
ஜெயம்ரவிக்கு கால் செய்த சிம்பு
இதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், நான் சொன்னா மணி சார் கேட்பாரா. சிம்பு எனக்கு கால் செய்து, மச்சி நான் இருக்கேனா சந்தோசப்படும் முதல் ஆள் நீ தான். மத்தவங்க யார் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ளாதே என்று கூறினாராம்.
அந்தணன் சர்ச்சை பேச்சு
மேலும் இதை கேட்ட பத்திரிக்கையாளர் அந்தணன் விளக்கம் கூறியுள்ளார். ஜெயம்ரவிக்கு சிம்பு கால் செய்து இதையெல்லாம் கண்டுகொள்ளாதே என்று கூறினார். அதை பலர் நீங்க தானே சொன்னீங்க என்று கேட்டுக்கொண்டு இருக்காங்க. நம்மிடம் அதை சொன்னதே சிம்பு தானே, மாநாடு சமயத்தில் தான் சிம்பு நம்மிடம் கூறினார்.
மேலும், சிம்பு நம்மிடம் இப்படி சொல்லிட்டு ஜெயம் ரவியிடம் அப்படி மாத்தி பேசுனது தான் வருத்தமாக இருக்கிறது என்று அந்தணன் கூறியுள்ளார். தற்போது இந்த விசயம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வைரலாகி வருகிறது.
ஏன்டா டூபாக்கூர்களா உங்க சோர்ஸ் யாருன்னு தெரிஞ்சுக்க தான் சிம்பு தன்னிடம் பேசியதாக ஜெயம் ரவி போட்டு வாங்கிருக்கான் , அது தெரியாம சிம்பு தான் அந்த சோர்ஸ் னு போட்டு உடைச்சிட்டீங்களே , இனிமே உங்கள எவன் நம்புவான் pic.twitter.com/JUWJJwSUgb
— kishore k swamy ?? (@sansbarrier) September 21, 2022