ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா.. சோகத்தில் ரசிகர்கள்!!

Jayam Ravi Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 25, 2024 09:17 AM GMT
Report

சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து தகவல் வருகிறது.

இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். சில பத்திரிக்கைகளில் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்றும்  விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சிலர், இது போன்ற செய்திகள் உண்மை இல்லை, வெறும் வதந்தியே என்று சொல்கின்றனர்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா.. சோகத்தில் ரசிகர்கள்!! | Jayam Ravi Divorce Aarthi

இந்நிலையில் ஆர்த்தியும் தனது கணவர் ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். இதனால் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தகவல் உண்மையா இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.