ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்யவிருந்த ஜெயம் ரவி!! ரகசியத்தை உடைத்த பிரபலம்..
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.
அண்மையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகர் ஜெயம் ரவி பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின மகளை திருமணம் செய்யப் போவதாக ஜெயம் ரவி இருந்தார். ஆனால் ஜெயம் ரவி பார்ப்பதற்கு சார்மிங்காக இருப்பதால் தன் மகளுக்கு திருமணம் செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வளைத்து போட்டார் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.