தொடர் தோல்விகள், உச்சக்கட்ட விரக்தியில் ஜெயம் ரவி

Jayam Ravi Siren
By Tony Feb 20, 2024 02:22 AM GMT
Report

ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மிகப்பெரும் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் தவிர்த்து நடித்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து தன் மாமியார் தயாரிப்பில் சைரன் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

தொடர் தோல்விகள், உச்சக்கட்ட விரக்தியில் ஜெயம் ரவி | Jayam Ravi Siren Movie Result

இந்த படத்தின் வசூல் ஜெயம் ரவியின் முந்தைய படங்களை விட ஓகே என்றாலும், கோமாளி, தனி ஒருவன் அளவிற்கு பெரிய வசூல் வரவில்லை.

அதிலும் வார நாட்களான நேற்று மிகவும் படுமோசமான வசூலே இப்படத்திற்கு வந்தது, இதன் மூலம் ரவி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளார், இவரை அவருடைய அண்ணன் மோகன்ராஜா தனி ஒருவன் 2-ல் கரை சேர்ப்பாரா பார்ப்போம்.