இலங்கை விசிட்!! விஜய்க்கு நடந்ததை போல் ரவி மோகனுக்கும் வந்த புது பிரச்சனை...
ஜெயம் ரவி, கெனிஷா
ஜெயம் ரவி படங்கள் பற்றி அதிக தகவல்கள் வருகிறதோ இல்லையோ அவரின் சொந்த வாழ்க்கை குறித்து தான் அதிக தகவல்கள் வருகிறது. ஜெயம் ரவி, கெனிஷா எனது நல்ல தோழி என்று கூற அவருடைய மனைவி ஆர்த்தி மறைமுகமாக அவரால் தான் எனது வாழ்க்கை கெட்டுப்போனது என கூறி வருகிறார். இப்படி விவாகரத்து பிரச்சனை பரபரப்பாக போய்க் கொண்டிருக்க ஜெயம் ரவி, கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ளார்.
பாடகி கெனிஷாவின் இசைக் கச்சேரி இலங்கையில் நடத்துவதற்கான பேச்சு வார்த்தைக்காக அவர்கள் அங்கே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜித் ஹெராஜ் டிவிட்டர் பக்கத்தில், ரவியும் கெனிஷாவும் இலங்கையில் திரைப்படங்கள் தயாரிப்பது மற்றும் இசை நிகழ்ச்சிக்ள் நடத்துவது பற்றி என்னிடம் பேசியதாகவும் இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என்று கூறியிருக்கிறார்.
புது பிரச்சனை
இந்நிலையில், இலங்கையில் இனப்படுகொலை நடந்தப்பின் இலங்கை நாட்டைச்சேர்ந்தவர்களுடன் தமிழ் சினிமா நடிகர்கள், கூட்டணி வைத்தால் இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்புவது வழக்கமான ஒன்று. லைக்கா நிறுவனம் முதன்முதலாக விஜய்யை வைத்து கத்தி படத்தை தயாரித்தபோது எதிர்ப்பு கிளம்பியது.
அதேபோல் இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனி வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தபோதும் எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது இலங்கை அரசுடன் ரவி மோகன் இணைந்து திரைப்பட தயாரிப்பு மற்றும் இசைக்கச்சேரிகள் நடத்துவது பற்றி பேசியது தற்போது புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே விவாகரத்து பிரச்சனையை சந்தித்துள்ள ரவி மோகனுக்கு இந்த பிரச்சனையும் தலைவலியை கொடுக்கும் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.