நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?.. ஆர்த்தி வெளியிட்ட பதிவு..

Jayam Ravi Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 21, 2024 10:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சமீபகாலமாக தொடர்ந்து நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருக்கிறது.

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வந்த ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப்போவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?.. ஆர்த்தி வெளியிட்ட பதிவு.. | Jayam Ravi Wife Aarthi Reply To Divorce News

தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவாகரத்து செய்தி பற்றி ஜெயம் ரவி அமைதி காத்து வந்தாலும், அவரது மனைவி ஆர்த்தி பதிலடி கொடுத்து இருக்கிறார். ஜெயம் படம் வெளிவந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பயோவில் "Married to jayamravi" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலமாக விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் ஆர்த்தி.   

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?.. ஆர்த்தி வெளியிட்ட பதிவு.. | Jayam Ravi Wife Aarthi Reply To Divorce News

Gallery