கமலுடன் அந்த காட்சி!! ரஜினி வேண்டாம் தூக்கி எறிந்து அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்ட நடிகை..

Kamal Haasan Rajinikanth Gossip Today Tamil Actress Actress
By Edward Jul 27, 2023 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை ஜெயஸ்ரீ. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1985ல் வெளியான தென்றலே என்னை தொடு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்தவர் நடிகை ஜெயஸ்ரீ. 4 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான ஜெயஸ்ரீ, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து வெளிநாட்டில் செட்டிலாக நினைத்திருந்தார்.

கமலுடன் அந்த காட்சி!! ரஜினி வேண்டாம் தூக்கி எறிந்து அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்ட நடிகை.. | Jayashree Reject Rajini Kamal Movie For Marriage

ஆனால் அவரது குடும்பத்தினர் படிப்பு முடிந்தது திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அப்போது இயக்குனர் ஸ்ரீதர், ஜெயஸ்ரீயை பார்த்ததும் அவரது தாயாரிடம் சென்று படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று கூறியவர்கள் சினிமாவில் பணம் புகழ் வரும் என்று கூறியதும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அதன்பின் தென்றலே என்னை தொடு படத்தில் நடித்து முடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஜெயஸ்ரீ.

பின் 1989 சமயத்தில் பல படங்களில் நடித்திருந்த ஜெயஸ்ரீக்கு அமெரிக்க மாப்பிள்ளை வரன் வந்துள்ளது. அந்த சமயத்தில் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை மன்னன் படத்தில் முதலில் ஜெயஸ்ரீயை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு கேட்டிருக்கிறார்.

ஆனால் ஜெயஸ்ரீ, கமல் ஹாசனுடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்பதால் வேண்டவே வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் வேறொரு நிகழ்ச்சியில் கமிட்டாகியதால் கமல் ஹாசன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக ஜெயஸ்ரீ சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

கமலுடன் அந்த காட்சி!! ரஜினி வேண்டாம் தூக்கி எறிந்து அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்ட நடிகை.. | Jayashree Reject Rajini Kamal Movie For Marriage

பாலசந்தர் எவ்வளவோ சொல்லியும் மறுத்த ஜெயஸ்ரீ, அதன்பின் ரஜினிகாந்த் படமான குரு சிஷ்யன் படத்தில் கெளதமி ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜெயஸ்ரீ வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

என் படத்தில் நடிக்க மறுத்த முதல் நடிகை நீ தான் என்று ரஜினிகாந்தே அவரை கிண்டல் செய்வாராம். அதன்பின் அமெரிக்க வங்கி அதிகாரியான சந்திரசேகர் என்பவரை 1988ல் திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் இருந்து விலகி இரு மகன்களை கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார்.

கமலுடன் அந்த காட்சி!! ரஜினி வேண்டாம் தூக்கி எறிந்து அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்ட நடிகை.. | Jayashree Reject Rajini Kamal Movie For Marriage

அமெரிக்க நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் செட்டிற்கு வந்து நடிப்பதாகவும் இருந்ததாம். சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.