ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்!! 44 வயது சீரியல் நடிகையிடம் எல்லைமீறிய பிரபல தயாரிப்பாளர்..
பாலிவுட் சின்னத்திரையில் இன்றுவரை ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி Taarak Mehta Ka Ooltah Chashmah. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலும் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் என்பவர் நடித்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி, தன்னை குடிக்க வா என்று ரூமிற்கு கூப்பிட்டதாகவும் பல முறை ஆபாசமாக பேசியும் தவறாக தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறி புகாரளித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது நடவடிக்கை ஒப்படியே இருந்ததால் தொடரில் இருந்து வெளியேறியதாகவும் தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை பிடித்துவிடுவோம் என்று இணைத்தயாரிப்பாளர்களும் மிரட்டியதாகவும் ஜெனிபர் கூறியுள்ளார்.

ஆனால் நடிகை சொல்வது அனைத்தும் பொய் என்றும் ஷூட்டிங்கிற்கு சரியான வருவது கிடையாது, அவர் நடத்தை சரியில்லை என்று தான் சீரியலில் இருந்து நீக்கியதாக மும்பை போலிசாரிடம் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி புகாரளித்துள்ளார்.
வேலை போன விரக்தியில் நடிகை இப்படி என்மீதும் ஷோமீதும் அபாண்டமாக பழிசுமத்தி வருவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.