ஜீவா சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடிய இயக்குனர்கள், இதெல்லாம் நியாயாமா
Jiiva
By Tony
ஜீவா தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், ஈ, கோ போன்ற தரமான படங்களில் நடித்தவர். இது மட்டுமில்லாமல் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போன்ற கலகலப்பான படங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால், இவர் கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்று பார்த்தால் அது கலகலப்பு 2 தான். பல வருடமாக ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு போராடி வருகிறார்.
இந்நிலையில் ஜீவாவை சமீபத்தில் சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஸ் சந்தித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று கூறினாராம், ஜீவாவும் சூப்பர் ஐடியா சார் என்று சொல்லி தனக்கு 4 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
இதை கேட்ட ராஜேஸ் அப்படியே திரும்பி விட்டாராம். ஜீவா மார்க்கெட் தற்போது அதளபாதளத்தில் இருக்க இவ்வளவு சம்பளம் கேட்கிறாரே என பிரபல பத்திரிகையாளர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.