தளபதி 68 பற்றி விஜய் கட்டிக்காத்த ரகசியம்.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இடத்தினை பிடிக்க போராடும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா. 80களில் இருந்து பல படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர் பி செளத்ரி அவர்களின் மகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

உளறிய ஜீவா
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜீவா, தந்தையின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் 100வது படத்தில் நடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, கண்டிப்பாக விஜய் நடிப்பார்.
ஒரு வாரத்திற்கு முன் தான் அவரை ஆர் பி செளத்திரி அவர்கள் சந்தித்து பேசியிருக்கிறார் 100 வது படத்தில் நான் நடிக்கிறேன் என்பது போல் அவரிடம் விஜய் கூறியதாகவும் ஜீவா மேடையில் தெரிவித்திருக்கிறார்.

தளபதி 68 தயாரிப்பு
அதாவது விஜய்யின் 68வது படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய் ரகசியமாக கூறியதை இப்படி ஓப்பனாக கூறிவிட்டாரே என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.