74 வயதில் 3வது திருமணம் செய்த மாஸ்க் பட நடிகர் ஜிம் கேரி..

Hollywood Movies Tamil Actors Hollywood
By Jai Oct 30, 2026 11:00 AM GMT
Report

ஜிம் கேரி

ஹாலிவுட்டில் நகைச்சுவை கலந்த தன்னுடைய உடல்பாணியுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிரபல நடிகர் ஜிம் கேரி. மாஸ்க், புரூஸ் ஆல்மைட்டி, ட்ரூ மேன் ஷோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

74 வயதில் 3வது திருமணம் செய்த மாஸ்க் பட நடிகர் ஜிம் கேரி.. | Jim Carrey Marries Min Ah In Los Angeles

64 வயதுள்ள ஜிம் கேரி, சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்காமலும் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை.

இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மின் ஹை என்பவரை நடிகர் ஜிம் கேரி திருமணம் செய்து கொண்டதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமண தேதி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

74 வயதில் 3வது திருமணம் செய்த மாஸ்க் பட நடிகர் ஜிம் கேரி.. | Jim Carrey Marries Min Ah In Los Angeles

ஜிம் கேரி, 1987ல் நடிகை மெலிஸா வூமர் என்பவரை திருமணம் செய்து எரின் கேரி என்ற மகளை பெற்றப்பின் 1995ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் 1996ல் தன்னுடன் நடித்த லெளரன் ஹோலி என்பவரை திருமணம் செய்து, ஒராண்டு கூட முடியாத நிலையில் 1997ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் தற்போது 64 வயதில் மின் ஹை-வை 3வது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.