மாடியில் இருந்து விழுந்த 2 வயது மகள்..கொட்டிய ரத்தம்!! எமோஷனலாக பேசிய ஜித்தன் ரமேஷ்..

Jithan Ramesh Gossip Today Actors Tamil Actors
By Edward Feb 17, 2026 02:30 AM GMT
Report

ஜித்தன் ரமேஷ்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் 3வது மகன் தான் ரமேஷ். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழும் ரமேஷுக்கு, ஜித்தன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

மாடியில் இருந்து விழுந்த 2 வயது மகள்..கொட்டிய ரத்தம்!! எமோஷனலாக பேசிய ஜித்தன் ரமேஷ்.. | Jithan Rameshs Emotional Daughter Painful Story

அதன்பின் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை பகிர்ந்து பகிர்ந்திருந்தார். இதனையடுத்து ஜப்பான், Route No. 17 போன்ற படங்களில் நடித்தார்.

சமீபத்தில் ஜித்தன் ரமேஷ் அளித்த பேட்டியில், பலர் என்னிடம் வந்து நீங்க சூப்பர் நடிகர், அந்த படத்தை பார்த்தேன், சூப்பர் என்று பொய்யாக புகழ்வார்கள். அப்படி புகழ்ந்து கதை சொல்லி என்னை நம்ப வைத்து படம் எடுக்க வைத்துவிடுவார்கள். ஆனால் பின் தான் தெரியும், அவர்கள் என் முதுகில் குத்தியது. இதுபோல் பலர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.

மாடியில் இருந்து விழுந்த 2 வயது மகள்..கொட்டிய ரத்தம்!! எமோஷனலாக பேசிய ஜித்தன் ரமேஷ்.. | Jithan Rameshs Emotional Daughter Painful Story

மாடியில் இருந்து விழுந்த 2 வயது மகள்

தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், என் மகள் என்றால் எனக்கு உயிர். மகள் தான் பிறக்க வேண்டும் என்று நான் ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால் என் மகளுக்கு 2 வயது இருக்கும்போது, அவள் மாடியிலிருந்து விழுந்துவிட்டாள்.

விழுந்ததில் தலையில் அடிபட்டு, முகத்தில் அடிபட்டு ரத்தமாக கொட்டியது. அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ் ஆக ஏறுகிறேன். என்ன செய்வது என்று அந்நேரத்தில் எனக்கு தெரியவில்லை.

மாடியில் இருந்து விழுந்த 2 வயது மகள்..கொட்டிய ரத்தம்!! எமோஷனலாக பேசிய ஜித்தன் ரமேஷ்.. | Jithan Rameshs Emotional Daughter Painful Story

என் வாழ்க்கையில் இந்த ஆம்புலன்ஸில் மட்டும் நான் போகவே கூடது என்று நினைத்திருந்தேன். ஆனால் அன்றிரவு மட்டும் 3, 4 ஆம்புலன்ஸில் நான் ஏறிஏறி இறங்கினேன். இந்த விஷயத்தை எப்போது நினைத்தாலும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் வாழ்வில் நான் மறக்க வேண்டும் என நினைக்கும் ஒரே விஷயம் இதுதான் என்று ஜித்தன் ரமேஷ் எமோஷனலாக பேசியிருக்கிறார்.