முடிவுக்கு வந்த ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2.. டைட்டில் அடித்த அந்த ஜோடி யார் பாருங்க
ஜோடி ஆர் யூ ரெடி
விஜய் தொலைக்காட்சியில் நடனம், பாடல், விளையாட்டு போன்றவற்றை மையப்படுத்தி நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒருபக்கம் சூப்பராக ஓட இன்னொரு பக்கம் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அட இவர்களா
இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடுவர்களாக உள்ளனர். ரியோ மற்றும் ஏஞ்சலின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2ன் பைனல் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இதில் ஐந்து ஜோடிகள் போட்டியிட்ட நிலையில், நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்ற அபினவ் மற்றும் ராணிக்குமாரி ஜோடி, ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டிலை வென்றுள்ளனர். மேலும் வெற்றி கோப்பையுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.