அனிரூத் கொடுத்த வாய்ப்பு! கொடிக்கட்டி பறக்கும் அரபிக் குத்து பாடகி..
vijay
anirudh
arabickuthu
Jonita Gandhi
By Edward
முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் நடிகைகள் தான் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுவார்கள். ஆனால் அது தலை கீழாக மாறியிருக்கிறது விஜய் படத்தில். ஏஆர் ரகுமான் அறிமுகப்படுத்திய பாடகியாக தமிழில் பல பாடல்களை பாடி வருபவர் ஜோனிடா காந்தி.
அனிரூத் இசையில் அதிகமாக பாடி வந்த ஜோனிடா தற்போது நடிகை அவதாரம் எடுத்துள்ளார். அதற்கு காரணமாக அமைந்தது அரபிக் குத்து தான். நடிகை பூஜா ஹெக்டேவை பார்த்து ஜொல்லுவிட்ட ரசிகர்களை விட ஜோனிடாவின் எக்ஷ்ஸ்பிரஷனை பார்த்து வழிந்த ரசிகர்கள் தான் அதிகம்.
அப்படி பெரியளவில் அரபிக் குத்து பாடல் மூலம் பிரபலமாகினார். நடிகை நயன் தாராவின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இதைதொடர்ந்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜோனிடா காந்தி.