நல்லா தானா இருந்தாங்க? இப்படியொரு போட்டோஷூட்டில் அரபிக்குத்து பாடகி ஜோனிதா..
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது பாடகியாக அனைவரின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஜோனிதா காந்தி. ஏ ஆர் ரகுமான் அறிமுகப்படுத்திய ஜோனிதா இந்திய மொழிப்பாடல்களில் பாடி அசத்தி வந்தார். அதன்பின் அனிருத் இசை கூட்டணியில் சமீபகாலமாக பாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அரபிக் குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கு பரவி வைரலானதை தொடர்ந்து, செல்லம்மா, பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்களில் அனிருத்துடன் நடனமாடிய வீடியோவும் வைரலானது.
இருவருக்கும் ஏற்கனவே காதல் இருப்பதாகவும் கிசுகிசு எழுந்த நிலையில், ஜோனிதா சமீபத்தில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு அனிருத்தை கூறியது பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அரபிக் குத்து பாடல் எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்ததை போல் ஜோனிதா காந்திக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்மூலம் நயன் - விக்கி தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் ஜோனிதா நடிக்கவுள்ளாராம்.
இதற்காக போட்டோஷூட்டும் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான முற்றிலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஒரு போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


