நெருப்பில்லாமல் புகையாது.. விஜய் - த்ரிஷா குறித்து பேசிய பத்திரிகையாளர்
சமீபத்தில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் ஒன்றாக தனி விமானத்தில் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் விஜய்யின் பிறந்தநாள் அன்று த்ரிஷா - விஜய் லிப்டில் எடுத்த புகைப்படமும் வைரலானதை நாம் அறிவோம்.
தொடர்ந்து இதுபோன்ற விஷயங்கள் நடந்து வரும் நிலையில், இருவர் குறித்தும் கிசுகிசுக்கள் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர் அந்தணன் இடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் கூறிய பத்திரிகையாளர் அந்தணன் "ரொம்ப உண்மையான கதைக்குள் நாம் முடியாது. அவர்களுக்குள் சினிமாவை தாண்டி எதோ ஒன்று இருக்கிறது என இண்டஸ்ட்ரியில் பேசப்பட்டு வருகிறது. அதனால் தான் வாங்க ஒரு ட்விட் போடும்பொழுது பெரிய விஷயமாக பேசப்படுகிறது."
"இண்டஸ்ட்ரியில் வந்த நெருப்பில்லாமல் புகையாது என ஒன்னு இருக்கிறது, எப்போதுமே. அதுமாதிரி பல முறை புகைஞ்சு, அது உண்மையாகவும் மாறியிருக்கிறது. இப்படியொரு சூழலில், இதுபோன்ற தகவல்கள் வருவதை அவரும் விரும்புகிறார் என்பது தான் இதன்மூலம் அறியப்பட்ட செய்தி."
"ஏன்னா, அவர் நினைத்திருந்தால் பொதுவெளியில் இப்படி போடவேண்டாம், உன்னுடைய வாழ்த்தை போனில் சொன்னால் போதும் என கூறியிருக்கலாம். ஆனால், பொதுவெளியில் அவங்க அதை பகிர்வதை அவர் விரும்புகிறார். அப்போ மெல்ல மெல்ல அதை சமூகத்திற்கு சொல்லவேண்டும் என நினைக்கிறாங்க" என பேசியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.