சந்தானத்துக்கு முட்டை மந்திரிச்சு வச்சாரு யோகி பாபு! குண்டை தூக்கி போட்ட பிரபலம்
யோகி பாபு குறித்த சர்ச்சை தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் மிகவும் பேசு பொருளாக உள்ளது. ஆம், பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன் ஆகியோர் காசு கொடுக்கவில்லை என்றால் உங்களை பற்றி தவறாக பேசுவோம் என்பது போல் யோகிபாபு சொன்னதாக கூறினார்.
அதை தொடர்ந்து பிஸ்மி, அந்தணன் யோகி பாபுவை கடுமையாக தாக்கினார்கள். அதிலும் யோகி பாபு அஜித் என்னை டோண்ட் டச் என்று சொன்னார் என்று கூறியது விஸ்வரூபம் எடுத்தது பிரச்சனை.
இந்நிலையில் யோகி பாபு அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட அஜித் ரசிகர்கள் கடுமையாக பிஸ்மி, அந்தணனை தாக்கினார்கள்.
இந்நிலையில் இவர்கள் யோகி பாபு முருக பக்தர், அவரின் முன்னாள் உதவியாளர் ஒருவர் இவர்களை தொடர்புக்கொண்டு, சார் பார்த்து இருங்கள், அவருக்கு பிடிக்கவில்லை என்றால் கோவிலில் எழுமிச்சை மந்திரிச்சு வேல்-ல் குத்தி விடுவார், இப்படித்தன் ஒருநாள் சந்தானம் பெயரை சொல்லி குத்தினார் என்று கூறியதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.