விஜய்க்கு சுகர் உள்ளது? அதனால் வந்த பிரச்சனை.. வலைப்பேச்சு அந்தணன் பரபரப்பு பேச்சு
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது, ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பரபரப்பு பேச்சு
இந்நிலையில், விஜய் குறித்து பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் சொன்ன விஷயம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், " விஜய்க்கு சுகர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த சுகர் விஜய்க்கு அதிகரித்து அவர் இந்த உணவுகள் மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, அதை தான் தற்போது விஜய் பின்பற்றி வருகிறார்.
மேலும், சுகர் வந்தால் Hair Loss ஆகும். ஒரு நடிகனுக்கு அவரது முகம் மற்றும் தலை முடி தான் மிகவும் முக்கியமான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.