விஜய்யை காலி செய்ய தமன்னா போதும்!! ரஜினி, நெல்சன் பிளானை புட்டுபுட்டு வைத்த பத்திரிக்கையாளர்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். மோகன்லால், ஜேக்கி ஷ்ரஃப், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் காவாலா என்ற சிங்கிள் பாடல் வெளியானது. தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் வெளியான இப்பாடல் முகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் எஸ் சங்கர் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார். விஜய் ரசிகர்கள் காவாலா பாடலை காலாய்த்து வருவது பற்றிய கேள்விக்கு, இரண்டு பாட்டும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய்க்கே குரு, வழிக்காட்டி எல்லாமே ரஜினிகாந்த் தான். சூப்பர் ஸ்டாரை பார்த்து தான் அரசியல் உட்பல பல விசயங்களை செய்து வருகிறார் விஜய்.
நான் ரெடி பாடலுக்கு பல விமர்சனம் இருக்கு, ஆனால் காவாலா பாடல் அப்படியில்லாமல் நன்றாக இருக்கு. தமன்னா கிளாமர் போஸ்டர் வெளியிட்டது, யுக்தி, பிளான் தான். தமன்னாவை வைத்து ரஜினிக்கு விளம்பரம் வருவதுன்னு சொல்றது எல்லாம் முட்டாள் தனம்.
விஜய் தனக்குத்தானே போட்டின்னு சொல்றது, எல்லாம் ரஜினிகாந்த் வசனம், அடுத்தவர்கள் வசனம் தான். காலா இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்னது தான் எனக்கு நான் தான் போட்டின்னு சொன்னார். விஜய் பேசுவது இரவல் வசனம் தான், விஜய்யை காலி செய்ய தமன்னா போதும் என்று எஸ் சங்கர் தெரிவித்துள்ளார்.