பெரிய ஃபிராடு..ஆம்புலன்ஸ் எல்லாம் ஏமாற்றுவேலை!! KPY பாலாவை விமர்சித்த பிரபலம்..
KPY பாலா
பிரபல தொலைக்காட்சி சேனலில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த KPY பாலா, தற்போது காந்தி கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகியிருக்கிறார்.
நடிப்பை தாண்டி பல உதவிகளை செய்து வரும் KPY பாலாவை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். அந்தவகையில் பாலா பற்றி பத்திரிக்கையாளர் உமாபதி, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் திடுக்கிடுமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
பத்திரிக்கையாளர் உமாபதி
அதில், KPY பாலாவுக்கு உண்மையிலேயே உதவும் மனப்பான்மை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவருக்கு எங்கிருந்து இவ்வளவு உதவிகள் செய்ய காசு கிடைக்கிறது. அவரே பல பேட்டியில், முழுக்க முழுக்க தன் உழைப்பால் திரட்டிய பணத்தை கொடுத்து உதவுகிறேன் என்று கூறுகிறார்.
அப்படியென்றால் இவர் இதுவரை வழங்கிய ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? அவ்வளவு காசு சம்பாதித்துவிட்டாரா?. அவர் கொடுக்கும் ஆம்புலன், இரு சக்கர வாகங்கள் அனைத்திரும் நம்பர் பிளேட்டில் நம்பர்கள் மறைக்கப்பட என்ன காரணம்? எல்லாம் ஏமாற்று வேலை.
ஆரம்பத்தில் அவர் அந்த அறக்கட்டளையும் பாலாவுக்கு பின்னால், என்னவெல்லாம் நடக்கிறது என்று இன்னொரு முறை நான் ஆதாரத்துடன் கூறுகிறேன். இதுபோன்று இருப்பவர்கள் எப்போதும் ஒரு சென்மெண்ட் கதைகளுடனே இருப்பார்கள்.
பெரிய ஃபிராடு
ஒரு ஆம்புலன்ஸின் இருக்கும் நம்பர் ஒரு உயரக காரின் நம்பர் பிளேட்டில் இருக்கும் எண் தான். அப்படியிருக்கும்போது இதில் இருந்தே தெரியவேண்டும் அது எல்லாம் டுபாக்கூர் வேலை. ஆம்புலன்ஸுக்கு இன்சூரன்ஸ் இல்லை. இப்போது ஹாஸ்பிட்டல் கட்டவேண்டும் என்று சொல்கிறார்.
ஹாஸ்பிட்டல் கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா? பாலா இதுபோல் சொன்னப்பின் தான் எனக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில், அது எங்கேயோ ஒரு நாட்டில் போய் முடிகிறது.
பாலாவால் பயன் பெற்றவர்களுக்கு நான் பேசுவதை கேட்கும்போது கோபம் வரலாம், ஆனால் யாரோ ஒருசிலருக்கு உதவி செய்துள்ளார் என்பதற்காக இந்த நாட்டை பலிகடாவாக மாற்றமுடியாது. பாலா நல்லவர், அவரை வைத்து சதி வேலைக்கு திட்டமிட்டு வருகிறார்கள், அதை நாம் தடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் உமாபதி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.