ஜோவிகா வருங்கால திரிஷா, நயன்தாராவா... வனிதாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இப்படத்திற்கு பின் சரியான வரவேற்பை பெறாத வனிதா செய்த திருமணங்கள் விவாகரத்தில் முடிய, இரு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்ததோடு பலரின் வெறுப்பையும் சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பீட்டர் பால் என்பவரை காதலி திருமணம் செய்த சில தினங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரைவிட்டு பிரிந்தார்.
அவரை திருமணம் செய்யவில்லை என்று வனிதா கூறிய சில வருடத்தில், பீட்டர் பால் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். யூடியூப்களில் பேட்டியளித்தும், ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா, தன் மகள் ஜோவிகாவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார்.
ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்து தற்போது வரை, சிலருடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய விளையாட்டை விளையாடாமல் இருப்பதை பலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் தன் மகளுக்கு ஆதரவாக பேசி, பிரதீப்பை விமர்சித்ததால் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டார்.
தற்போது தன் மகள் 18 வயதாகிறது, பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் சினிமாவில் 20 வருடம் பயணித்து திரிஷா, நயன்தாராவை போல் சினிமாத்துறையில் இருக்கும் வருங்காலம் அவளுக்கு இருக்கிறது என்று கூறி பேட்டி கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் வனிதாவையும் ஜோவிகாவையும் கலாய்த்து வருகிறார்கள்.