வனிதாவுக்கு தாலிக்கட்டிய ராபர்ட் மாஸ்டர்!! வீடியோ வெளியிட்ட மகள்..

Viral Video Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Edward Feb 15, 2025 09:30 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் வனிதா விஜயகுமார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா, 2 திருமணங்கள் விவாகரத்தில் முடிய மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் பீட்டர் என்பவரை கரம்பிடித்தார். ஆனால் ஒருசில வாரங்களில் இருவரும் பிரிந்த நிலையில், வனிதா தன்னுடையே கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

வனிதாவுக்கு தாலிக்கட்டிய ராபர்ட் மாஸ்டர்!! வீடியோ வெளியிட்ட மகள்.. | Jovika Post Vanitha Robert Master Web Marriage

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் மிஸஸ் அண்ட் மிஸ்டர் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர், வனிதாவுக்கு தாலிக்கட்டும் Subha Muhurtham வீடியோவை, அவரது மகள் ஜோவிகா இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதா விஜயகுமாரை கலாய்த்து வருகிறார்கள்.