அப்பா உயிரோட இருக்காரான்னு கேட்ட TVKகாரனுக்கு பதில் கொடுத்தது தப்பா!! ஜோவிதா லிவிங்ஸ்டன்..
இயக்குநரும் நடிகருமான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து ஏதாவது ஒரு பதிவினை போட்டு வரும் ஜோவிதா, தொகுப்பாளர் அசார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து, தனக்கு நடந்த ஒருசில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன்
அதில், நான் எங்கு சென்றாலும் என்னிடம் நீங்க தவெகவிற்கு எதிரானவரா? உங்களுக்கு விஜய்யை ஏன் பிடிக்கவில்லை? என்று கேட்கிறார்கள்ல். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விஜய் சாரின் ரசிகை நான், என்னைவிட என் தங்கைக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். ஆனால் சோசியல் மீடியாவில் நான் போட்ட ஒரு லைக்ஸ்-ஐ வைத்து தவெகவினர் இப்ப வரைக்கும் என்னஒ ட்ரோல் செய்கிறார்கள், அது எவ்வளவு பெரிய கேவலமான செயல் தெரியுமா?
சில மாதங்களுக்கு முன், கரூர் சம்பவம் நடந்த சமயத்தில் ஒருவர் அது பற்றி பேசியிருந்தார். அவர் பேசியது சரியாக இருந்தது அதற்காக லைக் போட்டேன். உடனே இதை வைத்து நான் தவெகவிற்கு எதிரானவள் என்று என்னை மோசமாக பேசத்தொடங்கினர்.

ஒருசிலர் இவளை உதயநிதி வைத்திருக்கிறாரா? ஸ்டாலின் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் ஆபாசமாக பேசுகிறார்கள்.
நானும் என் அப்பாவும் பாட்டுபாடி ஒரு வீடியோ போட்டோம், அப்போது அதில் தவெக தொண்டர் என்று கூறி, இன்னும் உன் அப்பன் சாகலையா என்று கேட்டார். அதற்கு நான் தவெகவிற்கு தொண்டர்தானே நீங்க, கரூர் கூட்டத்தில் மாட்டி சாகலையா? இன்னுமா உயிரோடு இருக்க என்று பதில் கொடுத்தேன். அது எவ்வளவு பெர்ய ரீச் ஆகும் எனூர் நான் நினைக்கவில்லை. அதன்பின் அவர் என்னை அன் ஃபாலோ செய்து ஓடிப்போய்ட்டான் என்று ஜோவிதா ஓபனாக பேசியிருக்கிறார்.