அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக!! ரங்கராஜின் 2வது மனைவி பதிலடி..
மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் கலைஞராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஜாய், சில நாட்களில் என்னை ரங்கராஜ் ஏமாற்றியதாகவும், அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கருவை கலைக்க டார்ச்சர் செய்ததாகவும் கூறி பேட்டியளித்தும் போலிசில் புகாரளித்தும் வந்தார்.
ஜாய் கிரிஸில்டா
இந்நிலையில் இணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஜாய் கிரிஸில்டா.
தற்போது, "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக" என்றும் “கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது. நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய்…இதுதானா உன் அன்பு அறிமுகம்" என்றும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

