குட்டி விக்ரமுடன் பிக்பாஸ் ஜூலி! விக்ரம் 3க்கு ரூட்டை வீசுகிறாரா? வைரலாகும் வீடியோ..

Vikram Movie
By Jai Jun 07, 2022 04:45 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் மரிய ஜூலியானா. ஜூலி என்று அழைக்கப்படும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் அவமானங்களை சந்தித்து புறக்கணிக்கப்பட்டார். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜூலி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வெளியில் சென்றும் வந்தார்.

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்ட பேரை தக்கவைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இடையில் பல நல்ல விஷயங்களை செய்து வரும் ஜூலி சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தினை பார்க்க சென்றுள்ளார்.

அங்கு படத்தில் குட்டி விக்ரமாக நடித்துள்ள குட்டி குழந்தையுடன் விளையாடியுள்ளார். அதன் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஜூலி.