ஜனநாயகனுக்கு நான் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு!!விஜய்யை மீண்டும் சீண்டிய ஜூலி..

Vijay Viral Video Maria Juliana Thamizhaga Vetri Kazhagam
By Edward Mar 02, 2026 05:38 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விமர்சனத்திற்குள்ளானவர் தான் மரிய ஜூலியானா. சமீபத்தில் வேலூர் பரப்புரையின் போது தவெக தலைவர் விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரியை வைத்து ஜூலி விமர்சித்து ஒரு வீடியோவை பகிர்ந்தார். ஜூலியின் பேச்சை விஜய் ஆதரவாளர்கள் பலரும் கடுமையாக தாக்கி பேசினர். தன்னை மிரட்டுவதாகவும் கூறி அடுத்தடுத்த வீடியோவை ஜூலி பகிர்ந்து வந்தார்.

ஜனநாயகனுக்கு நான் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு!!விஜய்யை மீண்டும் சீண்டிய ஜூலி.. | Julie Releases Another Video Criticising Vijay Tvk

இந்நிலையில், மீண்டும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கும் ஜூலி, தன்னை விமர்சித்தவர்களின் பேச்சை வீடியோவில் போட்டு பேசியிருக்கிறார்.

மீண்டும் சீண்டிய ஜூலி

அதில், நான் கூட விஜய் அண்ணா சொன்ன அந்த ஜல்லிக்கட்டு ஸ்டோரியை அப்படியே மனதில் வாங்கிக்கொண்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறது என்று நினைத்து பயந்தேன். ஆனால் அதன் கருத்து ஒருசிலருக்கு புரிந்ததை நினைத்து எனக்கு மிகவும் சந்தோஷம். ஒருசிலர் புரியாமல் என்னை திட்டுகிறார்கள். What is this VIJAY ANNA ? It's very wrong VIJAY ANNA, இதைத்தான் நான் சொன்னேன்.

ஜனநாயகனுக்கு நான் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு!!விஜய்யை மீண்டும் சீண்டிய ஜூலி.. | Julie Releases Another Video Criticising Vijay Tvk

உங்கள் கட்சியில் இருக்கும் முக்கால்வாசி பேர் உண்மையில் மைனராக இருக்கிறார்கள், இல்லை என்றால் மண்டையில் மைனராக இருக்கிறார்கள். பொது வாழ்க்கை வேற தனிப்பட்ட வாழ்க்கை வேற என்ற பக்குவம் நமக்கு இருக்கிறது.

இதனால், தேவையில்லாமல் கமெண்ட் பாக்ஸில் வந்து, ஐடி டீமை வைத்து, வல்கர் வாரியர்களை வைத்து அசிங்க அசிங்கமா திட்டாமல், நான் ஒரு கருத்தை வைத்தால் அதற்கு எதிராக ஒரு கருத்தை வைங்க, அதுதானே ஜனநாயகம். இதையெல்லாம் ஜனநாயகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தான் வருத்தமா இருக்கு என்று கூறியிருக்கிறார் ஜூலி. இதற்கு விஜய் ஆதரவாலர்கள் ஜூலியை கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.