திரும்பவும் சொல்ற 50, ஐம்பதா இருக்கட்டும்!! விஜய்யை தாக்கி பேசிய ஜூலி...
விஜய்யின் பரப்புரை
நடிகர் விஜய்யின் பரப்புரை பேச்சை கேட்டப்பின் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஜூலியின் வீட்டியோவின் கமெண்ட் செக்ஷன் மட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் விஜய் ரசிகர்களும் தவெக ஆதரவாளர்களும் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தினரை மோசமாக விமர்சித்ததால் காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஜூலி. அப்படியிருந்தாலும் ஜூலியை கடுமையாக விஜய் ரசிகர்கள், ஆதரவாளர்கள் மோசமாக பேசி வருகிறார்கள்.

கடந்த 4 ஆம் தேதி நடந்த தஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்ட சென்றபோது விக்னேஷ் என்ற மாணவர், விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகினார். உடனே மருத்துவமனைக்கு விக்னேஷ் அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி பேசுபொருளாகியது.
ஜூலி வீடியோ
தற்போது ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 50, ஐம்பதாகவே இருக்கட்டும், அதை 500 ஆக மாற்றி விட்டுவிட்டாதீர்கள் என்று சொன்னதற்கு வல்கர் வாரியர்ஸ் கமெண்ட் செக்ஷனில் வந்து பொங்கு பொங்குன்னு பொங்கினார்கள்.
இன்றைக்கு ஒரு மாணவன் இறந்துவிட்டார், இதைவைத்து அரசியல் பேசக்கூடாது என்று இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆசையாக உங்களை பார்க்க வந்துதானே, அந்த மாணவர் காவல்துறை வாகனத்தில் மோதி இறந்துவிட்டார். யாருக்கு நஷ்டம், பெற்றவர்களுக்குத்தானே நஷ்டம், உங்களுக்கு என்ன அண்ணா, நீங்க ஜாலியாக நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்வீர்கள்.

நீங்களும் ஜாலியாக இருங்கள், நான் திரும்பவும் சொல்றேன், 50, ஐம்பதாகவே இருக்கட்டும், அதை 500 ஆக மாற்றிவிடாதீர்கள். உடனே எங்களை குறை கூறாதீர்கள், நாங்கள் அனைத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம். 41 பேர் இறந்தபோது செய்தியாளர்களை சந்திக்க முடியாமல் பயந்தோடவில்லை.
உடனே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். யாரிடமிருந்து பாதுகாப்பு இல்லை தெரியுமா? உங்களின் வல்கர் வாரியர்ஸிடம் இருந்துதான் பாதுகாப்பு இல்லை. என் கமெண்ட் செக்ஷனை பாருங்கள் தெரியும் என்று காட்டமாக பேசியிருக்கிறார் ஜூலி.