பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முகத்துக்கு என்ன ஆச்சு! அதிர்ச்சியில் பல கோடி ரசிகர்கள்..
உலகளவில் பாப் பாடகர்களாக பிரபலமாவது என்பது சாதாரண விசயம் கிடையாது. அப்படி தன் குரல் தன்மை கொண்டு சிறுவயதில் அமெரிக்கவின் பிரபல பாடகராக திகழ்ந்து புகழ் பெற்றவர் ஜஸ்டின் பீபர்.
நூறு கோடி ரசிகர்களை கொண்ட பாப் பாடகர் பல பாடல்களை பாடி ரசிகளை ஈர்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட ஷாக் கொடுத்துள்ளார்.
தனக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' (Ramsay Hunt Syndrome) என்ற அரியவகை நோய் இருப்பதாகவும் அதனால் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய கண், வாய், மூக்கு சுத்தமாக அசைக்க முடியவில்லை, அதனால் டொரண்டோ நகரில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது உங்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கும்.
என்னால் உடல் ரீதியாக செயல்பட முடியவில்லை. ஓய்வு தேவைப்படுவதால் 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என்று நம்பிக்கையுள்ளது.
உங்கள் பிராத்தனை என்னை மீட்கும் என்று கூறியுள்ளார். இதனால் உலகம் முழுவதும் இருக்கும் ஜஸ்டின் பீபரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.