71 வயது நடிகருடன் ரொமான்ஸ்.. பல ஆண்டுகள் கழித்து ஜோதிகா எடுத்த முடிவு..

Mammootty Suriya Jyothika
By Edward Oct 20, 2022 04:15 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து ரியல் ஜோடியாக வளம் வந்தார்.

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என்று பார்த்து வந்த ஜோதிகா, 36 வயதினிலே, உடன்பிறப்பே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் கூட உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கணவர் சூர்யாவுடன் இணைந்து கடினமாக உடற்பயிற்சியை மேற்கொண்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி படத்தில் இணைந்துள்ளார் நடிகை ஜோதிகா.

71 வயதான மம்முட்டி காத்ல் தி கோர் என்ற தலைப்பு வைத்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி இந்த படத்தினை தயாரிக்கவுள்ளாராம். முதல் முறையாக மம்முட்டியுடன் மலையாளத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.