குடும்பம் குழந்தைகளை மறந்து அங்க போ.. மும்பையில் செட்டில் ஆனது தொடர்பாக பேசிய ஜோதிகா
கோலிவுட் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ஜோதிகா - சூர்யா தம்பதியினர். இவர்களைப் பற்றிய பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டே உள்ளன.
சமீபத்திய ஒரு பேட்டியில், ஜோதிகாவிடம், "உங்களுடைய நடிப்புக்கு சிவகுமார் தடையாக இருந்தார் என்றும், குடும்ப பிரச்சனைகள் காரணமாக மும்பையில் செட்டிலாகி விட்டார்கள்" என்ற வதந்திகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஜோதிகா பதிலளித்தது:
"என் அப்பா சிவகுமார் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். ஷூட்டிங் செல்லும் போது, குடும்பத்தை, குழந்தைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்," என்று தெரிவித்தார்.
"கோவிட் நேரத்தில் என் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனக்கு அடிக்கடி அங்கு செல்ல முடியவில்லை. அதனால் நான் சூர்யாவிடம் இதைக் கூறியபோது, அவர் மும்பையில் குடியேற சம்மதித்தார். அதற்காக வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை," என்று ஜோதிகா விளக்கினார்.