அழகில் அம்மாவை மிஞ்சும் ஜோதிகாவின் மகள்..வெளியான லேட்டஸ்ட் போட்டோ
Suriya
Jyothika
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து விஜய், சூர்யா எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஜோதிகா சூர்யா உடன் சேர்ந்து நடித்த போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் 2006 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சூர்யா தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் தியா காட்சியளிக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.