மேகம் கருக்குது தக்கச்சிக்கு தக்கசும்? குஷி ஜோதிகாவாக மாறி குளிக்கும் புகைப்படம்..

Suriya Jyothika Indian Actress
By Edward Jun 23, 2022 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக விளங்கியவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமாகிய ஜோதிகா அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை ஈர்த்தார்.

கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதிலும் சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகா ஒரு கட்டத்தில் அவரையே காதலிக்கவும் ஆரம்பித்தார். பிரண்ட் படத்தின் போது ஆரம்பித்த காதல் 4 வருட காதல் காத்திருப்பிற்கு பிறகு 2006 சூர்யாவை கரம் பிடித்தார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் குடும்பம் இரு குழந்தைகள் என வாழ்க்கையை ஓட்டினார். சமீபத்தி 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து ஒருசில படங்களில் நடித்தார். சூர்யாவுடன் சேர்ந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்து வரும் ஜோதிகா தற்போது கணவருடன் அமெரிக்காவிற்கு ட்ரிப் சென்றுள்ளார்.

கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜோதிகா குஷி படத்தில் எப்படி அருவியில் குளித்தாரோ அதேபோல் அங்குள்ள அருவியில் குளித்து கும்பாளம் போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Gallery