நயன் தாராவையே ஓரங்கட்டிய சூர்யா மனைவி!! நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா...

Jyothika Nayanthara Tamil Actress
By Edward Dec 19, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வாலி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், காக்க காக்க, பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயானார்.

நயன் தாராவையே ஓரங்கட்டிய சூர்யா மனைவி!! நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா... | Jyothika Pushed Back Nayanthara In Property Value

குழந்தைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் நடிகைகளுக்கான முக்கியத்துவம் இப்போது இல்லை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும் தன் மாமனார் சிவக்குமார் தனக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதாக பேசியிருந்தார்.

சமீபத்தில் மும்பையில் கணவருடன் செட்டிலாகியதற்கான முக்கிய காரணம் என்ன என்பதையும் கூறியிருந்தார். இந்நிலையில் ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வரும் ஜோதிகாவின் ஆண்டு வருமான 20 முதல் 30 கோடி என்றும் அவரின் மொத்த சொத்து மதிப்பு 330 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் இடத்தினை பிடித்துள்ள நடிகை நயன்தாராவே 183 கோடி சொத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.