நக்மா ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி கிடையாதா!! அப்போ இந்த நடிகை தான் அக்காவா?
Jyothika
Nagma
Tamil Actress
By Edward
நக்மா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவில் அக்கா, தங்கையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா. இருவரும் இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள்.
ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று வளர்ந்து தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.
ஆனால் நடிகை நக்மா பல பிரபலங்களுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ரோஷினி
ஜோதிகா - நக்மா இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை.ஒன்றுவிட்ட சகோதரி தானே தவிர உடன்பிறந்த சகோதரி இல்லை.
அவர் பெரியம்மாவின் மகள், ஜோதிகாவின் சொந்த சகோதரி ரோஷினி தான். அவர் அருண் விஜய்யுடன் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், திருமணமாகிவிட்டது.