புகுந்த வீட்டிற்கு நடிகை ஜோதிகா செய்யும் தியாகம்!! இதற்காகதான் சினிமாவைவிட்டு விலகினாரா!!
மும்பையில் இருந்து வந்து தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தின் மூலம் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா, விஜய், அஜித், சூர்யா, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
சூர்யாவை 4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு புகுந்தவீட்டினர் கூறியதால் சினிமாவில் இருந்து விலகி குழந்தைகள் குடும்பம் என்று பார்த்து வந்தார்.
அதன்பின் பிள்ளைகள் வளர்ந்த பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரிஎண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்.
சினிமாவிற்கு மீண்டும் வந்ததும் கதை விசயத்திலும் கதாபாத்திரம் விசயத்தில் எத்தனை பெரிய நடிகர்கள் படம் என்றாலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் ஒப்புக்கொள்ளும் தீர்மானத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதிலும் முன்னணி நடிகர்கள் என்றாலும் அவர்களின் படத்தில் கவுரவமான வேடங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.
தன்னால் தன்னுடைய புகுந்த வீட்டிற்கும் கணவருக்கும் எந்த அவப்பெயரும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறாராம் ஜோதிகா.
தற்போது பாலிவுட் படத்தில் கமிட்டாகி அதற்காக மும்பையில் செட்டிலாகியும் இருக்கிறாராம்.
You May Like This Video