மும்பையில் பங்களா!! சூர்யாவை விட கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் நடிகை ஜோதிகா..

Suriya Jyothika Tamil Actors Tamil Actress Kanguva
By Edward Jul 16, 2024 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா. பல படங்களில் இருவரும் ஜோடியாக நடித்து, நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறி இருவரும் தீராகாதலில் இருந்து வந்தனர். பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் குடும்பம் குழந்தை என்று இருந்து சினிமாவை விட்டு விலகினார் ஜோதிகா.

மும்பையில் பங்களா!! சூர்யாவை விட கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் நடிகை ஜோதிகா.. | Jyothika Suriyas Net Worth Combined 2024

சில ஆண்டுகளுக்கு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 25 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

அவரது கேரியரில் சிறுத்தை சிவா படத்திற்காக 30 கோடி சம்பளமாக பெற்றதாக தகவலும் வெளியாகியுள்ளது. நடிப்பை தாண்டி தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சூர்யா, சில லீக் கிரிக்கெட் போட்டி அணியை சொந்த அணியாக வாங்கி பல நூறு கோடி வருமானமும் ஈட்டி வருகிறார்.

அப்படி சூர்யா - ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு 537 கோடி என் தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் பங்கு 206 கோடியாகவும் ஜோதிகாவின் பங்கு 331 கோடி என்றும் கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

மும்பையில் பங்களா!! சூர்யாவை விட கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் நடிகை ஜோதிகா.. | Jyothika Suriyas Net Worth Combined 2024

இதில் சூர்யாவை விட ஜோதிகா சுமார் 125 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக தெரியவருகிறது. ஏற்கனவே மும்பையில் சொந்தமான பல கோடி மதிப்பில் பங்களா வாங்கி செட்டிலாகி இருக்கிறார் ஜோதிகா. அதன் விலை 70 கோடி மதிப்பு என்றும் கூறுகிறாகள்.