கட்டாயப்படுத்தினால் ஏன் அப்படி நடிச்சீங்க!! டாப்ஸிக்கு பதிலடி கொடுத்த நடிகை ஜோதி..
நடிகை டாப்ஸி
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை டாப்ஸி, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் க்ளியவேஜுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும், தென்னிந்தியாவில் தொப்புள், இடுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும் பேசியிருந்தார்.
மேலும் ஒரு இயக்குநர் தன்னை பேடட் ப்ரா அணிய சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் டாப்ஸி.

ஜோதி பூர்வராஜ்
இந்நிலையில் பாலிவுட் குறித்தும் தென்னிந்திய சினிமாவை குறித்தும் டாப்ஸி பேசியதற்கு கில்லர் பட நடிகை ஜோதி பூர்வராஜ் பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார்.

அதில், சினிமாவே கிளாமர் துறைதான். யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டார்கள். அப்படி உங்களை கட்டாயப்படுத்தி நடிக்கச் சொன்னால், நடிக்கமாட்டேன் என்று வேறு தொழிலை பார்த்து செல்ல வேண்டியது தானே என்று ஜோதி பூர்வராஜ் தெரிவித்துள்ளார்.