பலமுறை தற்கொலை முயற்சி! பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை
தமிழ் சினிமாவில் தி லிஜெண்ட் இயக்குனர் என்ற பெயரை பெற்று சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் வந்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ். முருங்கைகாயை மையப்படுத்தி இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமா என்று பிரம்பிக்க வைத்தவர் பாக்யராஜ்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகமாக்கினார். அவருக்கு முன்பே மூத்த மகள் சரண்யா பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். சில படங்களில் நடித்திருந்த சரண்யா பின் வெளிநாடு சென்று படித்தபோது காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தற்போது அதிலிருந்து வெளியே வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுக்கி தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். சமீபத்தில் சாந்தனு சரண்யாவுடன் எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

