17 கோடி எப்படி வந்துச்சி? தயாரிப்பாளரை மேடையில் அசிங்கப்படுத்திய பாக்யராஜ்..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் மூத்த நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் கே பாக்யராஜ். தனித்துவமான இயக்கத்தின் மூலம் நல்ல வெற்றிகளை கொடுத்து வந்த பாக்யராஜ் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த செஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் 6 லட்சம் நஷ்டம் என்று கூறிவிட்டு சில படத்திற்காக 17 கோடி பைனான்ஸ்க்கு வட்டிக்கு கொடுத்தது எப்படி என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் கேட்டுள்ளார்.
பைனான்ஸ் கொடுக்க நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் ராஜனுக்கு எப்படி இவ்வளவு காசு வந்தது என்று கேட்டதோடு, ஸ்கூல் நடித்துகிறார், மற்ற தொழிலும் செய்கிறார் எப்படியாவது கொடுத்திருப்பார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கையில் இருக்கும் காசு கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அதை, இப்படத்தின் தயாரிப்பாளருக்காக செய்து கொடுத்துள்ளார் கே ராஜன் என்று புகழ்ந்து பேசியும் உள்ளார் கே பாக்யராஜ்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க