கமல் கொடுத்த பிளாப்! கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ரஜினி பட தயாரிப்பாளர்..

rajini maniratnam kamalhaasan nayagan kdkunjimon
By Edward Mar 02, 2022 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் ஆர்டரில் இருக்கும் நடிகர்கள் தங்களை உயர்த்திவிட்டவர்களை ஒரு கணம் மறந்து கண்டுகொள்ளாமல் போவதுண்டு. அந்தவகையில் கடலை போட பொண்ணு வேணும் படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு பல தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வருகை தந்த பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் சில உண்மைகளை உடைத்துள்ளார்.

1986ல் வெளியான மெளன ராகம் படத்தினை ஜி. வெங்கடேஷ்வரன் அவர்கள் தன் மனைவி பெயரில் சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தை துவங்கி அப்படத்தை தயாரித்தார். அப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இதையடுத்து அக்னி நட்சத்திரம் படமும் வெற்றியை கொடுத்தது.

இதைதொடர்ந்து மணிரத்னத்தின் நாயகன் படத்தினை நான் விநியோகம் செய்யமாட்டேன் என்றும் அப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பணம் வாராது என்பதால் அதை பண்ண மாட்டேன் என்று கூறினேன். ஆனால் அப்படத்தை தயாரித்த ஜி. வி என்னிடம் அந்த படத்தினை விநியோகம் செய்ய கேட்டுக்கொண்டார்.

என்னுடைய காட்ஃபாதர் என்பதால் நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு நாயகன் படம் நஷ்டத்தை கொடுத்தது. இப்படத்தினால் கடன் தொல்லை ஏற்பட்டு ஜிவி தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது கூட ரஜினி, மணிரத்னம் கூட அவருக்கு உதவ முன்வரவில்லை. கடன் குறித்து ஜிவி என்னிடம் பல முறை மனம் நொந்தி பேசி துப்பாக்கி கொடு நான் சாகவேண்டும் என்று கூறுவார். ஆனால் திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை கொடுத்தது என்றார் குஞ்சுமோன்.

ரஜினிகாந்த், மணிரத்னம் கூட்டணியில் தளபதி படத்தினை ஜி. வெங்கடேஷ்வரன் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.