உன் பிளாப்-ஆல எத்தனை தயாரிப்பாளர் நாசமாகிட்டாங்க!! விஜய்யை கடுமையாக தாக்கிய கே ராஜன்..

Rajinikanth Vijay Viral Video Gossip Today
By Edward Aug 04, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட நடிகராகவும் உருவெடுத்துள்ளவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தின் வேலைகளில் இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் முக்கிய பாடல்களும் வெளியானது. லியோ படத்தினை தாண்டி தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருவது ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் அடுத்து விஜய்க்கு தான்.

ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக படுமோசமான இணைய சண்டை நடைபெற்று வருகிறது. இது குறித்தும் ரஜினி ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்சில் பேசியது குறித்தும் இணையத்தில் வாக்குவாதங்களாக சென்று கொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த விசயம் குறித்து பகிர்ந்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் பேட்டியில் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி விமர்சித்திருகிறார்.

அதில், எல்லாத்தையும் கனக்கில் வைத்து தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். அது 72 வயதாகியும் நிலைத்திருக்கிறது. போட்டிப்போடுவர்கள் இந்த வயதில் நடிக்க முடிமான்னு அவங்களே சந்தேகம் தான். சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமே பொருந்தும், அதை சொந்தப்போட யாருக்கும் உரிமையில்லை.

என் படம் இத்தனை நாள் ஓடிச்சி, வசூலிச்சின்னா நாளை அது அப்படியே குறைஞ்சிடும், யார் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கொள்ளும் நடிகர் அவர்கள் படம் எத்தனை படம் பிளாப்பாகி எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா.

திருப்பி படம் எடுக்க முடியல. நம்பர் ஒன்னு நினைச்சா வேறு பட்டத்தை வெச்சிக்க, தப்பில்ல, மக்கள் அன்பால் கொடுத்தா வாங்கிக்க, ஒருவர் வாழும் போது அவர் பெற்ற பட்டத்தை தனக்குன்னு யாராவது சொன்னாங்கன்னு சொந்தகொண்டாடுறது தப்பு. அது விஜய்ன்னு அந்த போட்டி நிலவுது, ஆனா விஜய் இன்றுவரை ஏதும் சொல்லல.

விஜய் பண்ண தப்பு என்னன்னா, வாரிசு பட ஆடியோ லான்ச்சில், சரத்குமார் அதை சொன்னதை, விஜய் அதற்குரியவர் ரஜினிகாந்த் தான் எனக்கு தளபதி பட்டம் போதும் என்று சொல்லி இருந்தால் அவர் புகழ் உயர்ந்திருக்கும். இன்றுவரை ஒரு பதிலும் சொல்லல அதுதான் ஒரு குற்றம் என்று கே ராஜன் தெரிவித்திருக்கிறார்.