இதுக்குதான் 5 கோடி வாங்குறியா? நயன் தாராவை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில்லாமல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நயன் காதலருடன் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
படத்தின் பிரமோஷனுக்கு வருவதில்லை. மேடையில் நல்ல படம் வசூல் பெறும் என்று கூறி பின் அது ஓடவில்லை என்றால் எனக்கு அது கெட்ட பெயராகிவிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் நயன் தாராவை கண்டபடி பேசி விளாசியுள்ளார்.
படத்தில் 5 கோடி சம்பளம் வாங்கும் நயன் தாரா, படம் ஓடுமா ஓடாதா என்பதை கதை கேட்டும் நடிக்கும் போதும் 5 கோடி சம்பளம் வாங்கும் போது தெரியாதா? பெயிலியர் படமாகிவிடும் என்று.
ஆனால் உங்க தயாரிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் படத்திற்கு மட்டும் புரமோஷனுக்கு வருகிறாய்? இது கேவலமாக இல்லையா என விளாசிய கே ராஜன், அவர்களை சொல்லி குற்றமில்லை இங்கு இருக்கும் தமிழன் சரியில்லை என்று கூறியுள்ளார்.