கேரவனில் உட்கார்ந்து குஜால் பண்றீங்க.. நடிகர்களை விளாசி கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்..

Gossip Today
By Edward Aug 04, 2022 08:30 AM GMT
Report

தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்றும் ஒரு படத்தின் தாமதம் அவர்களுக்கு எத்தனை கோடி நட்ஷம் கொடுக்கிறது என்றும் சமீபகாலமாக பேசி வருகிறவர் தயாரிப்பாளர் கே ராஜன்.

சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் செய்யும் அட்டூழியம் பற்றி சமீபத்தில் நடந்த நாட் ரீச்சபிள் என்ற படத்தில் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தற்போதைய காலக்கட்ட சினிமாவை காப்பாற்றுவது சிறு பட தயாரிப்பாளர்கள் தான்.

பெரிய நடிகர்கள் அவரவர்கள் பிழைக்க தான் பார்க்கிறார்கள். சினிமாவிற்கே துரோகம் செய்கிறார்கள். இங்க ஷூட்டிங் எடுக்கிறதை விட்டுவிட்டு ஹைதராபாத்துக்கு போகிறார்கள் என்று விளாசியுள்ளார். மேலும் கேரவன்ல உட்கார்ந்து சீட் ஆடுறாங்க, குஜால்லாம் பண்றாங்க. ஷாட்டுக்கு வர சொன்னா சீக்கிரம் வர்றது கிடையாது.

யாரு வீட்டு காசுல கேரவன்ல இப்படி பண்றீங்க. ஒரு மணி நேரம் தாமதப்படுத்துறாங்க. இதனால அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் தெரியுமா என்று கேள்வி கேட்டுள்ளார். ஷூட்டிங்கிற்கு வரதுக்கு 7 பவுன்சர் வேற. இவங்க என்ன தீவிரவாதிகளா, கெட்ட காரியம் பண்ணிட்டீங்களா என்றும் கேட்டுள்ளார்.