மேடையில் பிரபல தயாரிப்பாளரிடம் சண்டை.. மரியாதையில்லாமல் நடந்து கொண்ட செண்ட்ராயன்..
தமிழ் சினிமாவில் 90காலக்கட்டத்தில் பல படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் கே ராஜன். சமீபகாலமாக சினிமா படங்களின் நிகழ்ச்சிகளிலும் யூடியூப் பேட்டிகளிலும் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை பேசி வருகிறார்.
தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை இந்த டாப் நடிகர்கள் என்று கூறி பல மேடைகளில் பேசி வரும் கே ராஜன் அவர்கள் லோக்கல் சரக்கு என்ற படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, அப்படத்தில் கே ராஜன் அவர்கள் பேசுகையில், இசையமைப்பாளர் வி ஆர் சுவானிநாதன் ராஜேஷ், இந்த படத்திற்கு பின் படத்தினை தயாரிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
ஒரு 5, 6 படம் எடுத்து முடித்து பெரிய ஆளாக மாறியப்பின் படம் எடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட மேடையில் இருந்த நடிகர் செண்ட்ராயன், இதை அப்படி சொல்லாதீங்க. அவரால் தான் எங்களுக்கு வேலை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே கே ராஜன், நான் பேசி முடிச்சிட்ட பிறகு பேசு, உட்காரு, நாங்க வேற வேலை வாங்கித்தறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும், உங்களுக்கு வேலை கொடுத்துட்டு நாங்க எங்க போகிறோம் தெரியுமா என்றும் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை நான் அறிந்திருக்கிறேன்.
மேடையில் பேசும் போது இடையூறு செய்யாதே என்று கோபமாக பேசியுள்ளார். இதனால் செண்ட்ராயன் கோபத்தில் சங்கடப்பட்டுள்ளார்.
Worst behavior ya #krajan
— Nammavar (@nammavar11) September 21, 2022
Paavam ya avaru #sendrayan pic.twitter.com/8uOSvDlTQG