அன்று ரூ.4 லட்சம் சம்பளம்..இப்போ ரூ.150 கோடி சம்பளம்!! பான் இந்தியா நடிகரான வசூல் நாயகன்..
ரூ. 4 லட்சம் முதல் ரு.150 கோடி வரை சம்பளம் வாங்கும் அளவிற்கு கடின உழைப்பும் ரசிகர்களின் ஆதரவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படித்தான் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி த்ற்போது பான் இந்தியா ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ஒரு நடிகர். அவர் தான் நடிகர் பிரபாஸ்.

நடிகர் பிரபாஸ்
சினிமாவில் அடியெடுத்து 24 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ராஜா சாப் சரியான வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை. பிரபாஸ் அவர் அறிமுகமாகிய ஈஸ்வர் என்ற படத்திற்கு ரூ. 4 லட்சம் சம்பளமாக பெற்றார்.
அதன்பின் படிப்படியாக முன்னேறி ரூ. 1 கோடி ஆரம்பித்து தற்போது ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக பெறுகிறார். அவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

சலார், கல்கி போன்ற படங்களும் சரியான வசூலை கொடுத்தது. ஆனால் கடைசியாக அவர் நடித்த ராதே ஷ்யாம், ஆதிருஷ், தி ராஜா சாப் படங்கள் தோல்வியை தழுவியது. தி ராஜா சாப் படத்திற்காக பிரபாஸ் சுமார் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் பிஸியாக நடித்து வருகிறார்.