விஜய்யை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் பிரபல தயாரிப்பாளர்! பிகிலில் இத்தனை கோல்மால்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் பற்றி சமீபத்தில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்பா, அம்மாவிற்கு எதிராக தன்னுடைய புகைப்படங்களை விஜய் மக்கள் இயக்கத்திற்கு பயன்படுத்த கூடாது என்று வழக்கு தொடர்ந்தார் விஜய்.
இதனால், அப்பா அம்மாவிற்கு எதிராக விஜய் செய்யும் செயல் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்ததாகவும் விஜய் அப்பா பல பேட்டிகளிலும் மேடைகளிலும் பேசியிருந்தார். இதுகுறித்து பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு படத்தின் விழாவில் பேசியபோது, விஜய் அம்மா, அப்பாவை மதிப்பதில்லை என்று தெரிந்து அதிர்ச்சியாக இருந்தது என கூறி விஜய்க்கு அட்வைஸ் செய்து பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் விஜய் பற்றியும் பிகில் படத்தை பற்றியும் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். அப்பா அம்மாவை மதிக்காதவர்கள் யாரும் நல்லா இருக்க முடியாது.
அது பெரிய நடிகராக இருந்தாலும் அப்பா அம்மாவை கோர்ட் வரைக்கும் இழுத்துக்கொண்டு போகாதீர்கள். பொண்டாட்டி வந்ததும் அப்பா அம்மாவை ஒதுக்காதீர்கள் என்று பேசியுள்ளார். மேலும், ஷாருக்கானின் இந்தி படம் ஒன்றினை பார்த்தேன்.
அதை தழுவிய ஒரு கதையை பெரிய நடிகர் ஒருவர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளியானது. தயாரிப்பாளருக்கு 300 கோடி போட்டு 30 கோடி நஷ்டத்தை சந்தித்தார். இதுக்கு பல செலவுகள், கமிஷன் வேற என்று கூறியதோடு சவால் விட்டு பேசியுள்ளார் கே ராஜன்.